Welcome to Mithra Food Products

பண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் எண்ணெய் வித்துக்களை வைத்து வாகை மரத்தினால் ஆன செக்கை கொண்டு தயாரிக்கப்பட்ட எண்ணெய்களை நம் உணவில் சேர்த்து, இயற்கை வழியில் ஆரோக்கியமன வாழ்வை வாழ்ந்து வந்தார்கள். ஆனால், தற்போது நம் முன்னோர்களின் வாழ்வியல் முறையான "உணவே மருந்து" என்ற இயல்பை சில கலாச்சார மாற்றங்களின் காரணத்தினால் விஷமே உணவாக உட்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்நிலை மாற வேண்டும் என்ற உயரிய நோக்குடன் நம் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் ஓர் முயற்சியாக தொடங்கப்பட்ட ஓர் இயற்கை வழி நிறுவனம்.

Our Products

நம் மரபில் விவசாயம், உணவு, ஆரோக்கியம் என்பன ஒன்றோடொன்று பின்னி பிணைந்தே வந்துள்ளன. நம் உணவில் அன்றாடம் 20 - 25% கொழுப்பு சத்து அவசியம் தேவையாக உள்ளது. சராசரி தென்னிந்திய உணவில், உடலுக்கு தேவையான கொழுப்பு சத்து 50% எண்ணெய்கள் மூலமே கிடைக்கின்றன.

image1

தேங்காய் எண்ணெய் | Coconut Oil

சல்பர் இல்லாத தேர்ந்தெடுக்கப்பட்ட தேங்காய்களை, வாகை மர செக்கில் எவ்வித கலப்படமில்லாமல் குறைந்த வெப்பநிலையில் உற்பத்தி செய்து இரண்டு நாட்கள் தெளிய வைத்து, பின்பு வடிகட்டி உருவாக்கப்படுகிறது.

image2

கடலை எண்ணெய் | Groundnut Oil

முதல்தர கடலை வித்துகளை தூய்மையான முறையில் சுத்தம் செய்து சூரிய வெப்பத்தில் உலர்த்தப்பட்டு, பாரம்பரிய முறையில் செக்கினால் ஆட்டி தயார் செய்து இரண்டு நாட்கள் தெளிய வைத்து பிறகு உருவாக்கப்படுகிறது.

image3

எள்ளு எண்ணெய் | Sesame Oil

முதல் ரக தேர்ந்தெடுக்கப்பட்ட எள்ளை தூய்மையான முறையில் சுத்தம் செய்துசூரிய வெப்பத்தில் உலர்த்தி அத்துடன் குறிப்பிட்ட அளவு பனங்கருப்பட்டி சேர்த்து, வாகை மர செக்கில் உற்பத்தி செய்யப்படுகிறது.

"Life with the nature is progress, not against"